உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சோனா இயற்கை மருத்துவ கல்லுாரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

சோனா இயற்கை மருத்துவ கல்லுாரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

சேலம், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் யோகா' எனும் கருப்பொருளை மையமாக வைத்து, நடப்பாண்டு யோகா தினத்தை கடைப்பிடிக்கிறது.இதை ஒட்டி, சேலம், சோனா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ கல்லுாரி சார்பில், அங்குள்ள மைதானத்தில், யோகா தின விழா கொண்டாடப்பட்டது.இதற்கு தலைமை வகித்து, சோனா கல்வி நிறுவன துணைத்தலைவர் தியாகு பேசுகையில், ''ஆண்டுதோறும் ஜூன், 21ல், உலகமே ஒன்று சேர்ந்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுகிறது. இந்த உலகளாவிய நிகழ்வு, யோகாவின் பண்டைய இந்திய பயிற்சி மற்றும் உடல், மன, ஆன்மிக நல்வாழ்வில், அதன் ஆழமான தாக்கத்தை அங்கீகரிக்கிறது,'' என்றார்.தொடர்ந்து ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வித்துன்குமார், லேப்ராஸ்கோபிக் மற்றும் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் சிவராம், மகப்பேறு மருத்துவர் சங்கமித்ரா பேசினர். முதல்வர் தர்மசம்வர்த்தினி, பேராசிரியர்கள் பங்கேற்றனர். இதையடுத்து கல்லுாரி மாணவர்களின் யோகா நடன நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ