உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவிலில் தாலி திருட்டு சிறுவர்களிடம் விசாரணை

கோவிலில் தாலி திருட்டு சிறுவர்களிடம் விசாரணை

ஆத்துார்: சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு கடந்த, 17ல், அம்மனுக்கு அணிவித்திருந்த, ஒரு கிராம் தங்க தாலி திருடுபோனது. 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது, தாலியை ஒருவர் திருடிச்சென்றது பதிவாகி இருந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகி தியாகராஜன் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் விசாரித்தபோது, தாலியை திருடியது, ஆத்துார் டவுனை சேர்ந்த, 17, 18 வயதுடைய சிறுவர்கள் என தெரிந்தது. அவர்களை நேற்று போலீசார் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ