நாச்சியப்பா கூட்டுறவு மேலாண் நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு அழைப்பு
சேலம் :சேலம் மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ராஜ்குமார் அறிக்கை:சேலம், காமராஜர் நகர் காலனி யில் உள்ள, நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், சனி, ஞாயிறில் மட்டும் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை, வரும், 22 முதல், மேலாண் பயிற்சி நிலையத்தில், அலுவலக வேலை நேரங்களில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.அக்டோபர், 2ம் வாரம் பயிற்சி தொடங்கும். பயிற்சி காலம், 2 மாதங்கள். அதாவது சனி, ஞாயிறில் என, 17 நாட்கள். இதில் சேர, குறைந்த பட்ச வயது, 15. கல்வித்தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சி. சேலம் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிவோர், இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். விண்ணப்பம், தேர்வு கட்டணம், ஜி.எஸ்.டி., சேர்த்து, 4,668 ரூபாய். இக்கட்டணத்தில், 500 ரூபாய் மதிப்பில், தரம் அறியும் உபகரணம் வழங்கப்படும்.பயிற்சி முடித்தவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு உள்ளிட்ட அனைத்து வங்கிகளில், நகை மதிப்பீட்டாளராக பணியில் சேர வாய்ப்புள்ளது. விபரங்களுக்கு, நாச்சியப்பா கூட்டுறவு மேலாண் நிலையத்தை நேரிலோ, gmail.comஎன்ற மின்னஞ்சலிலோ, 0427 - -2240944 என்ற தொலைபேசி எண்ணிலோ அணுகலாம்.