உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை அம்பேத்கர் பிறந்தநாள் அ.தி.மு.க.,வினருக்கு அழைப்பு

நாளை அம்பேத்கர் பிறந்தநாள் அ.தி.மு.க.,வினருக்கு அழைப்பு

சேலம்: சேலத்தில், அ.தி.மு.க.,வின், மாநகர மாவட்ட பூத் கிளை நிர்-வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அமைப்பு செயலர் சிங்காரம் தலைமை வகித்து பேசியதாவது:நிர்வாக வசதிக்கு மாநகரில் உள்ள, 60 வார்டுகள், 133 வார்டுக-ளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில், 670 பூத்களில், கிளை நிர்வா-கிகள் தலா, 9 பேர் வீதம், 6,030 பேர் இறுதி செய்யப்பட்டுள்-ளனர். இவர்கள் நியமனம் குறித்து, பொதுச்செயலரிடம் ஒப்-புதல் பெறப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, முள்ளுவாடி கேட் அருகே உள்ள அவரது சிலைக்கு, நாளை காலை, 9:30 மணிக்கு, பொதுச்செயலர் இ.பி.எஸ்., மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதால், கட்சியினர் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டது. மாநகர பொறுப்பா-ளர்கள் செல்வராஜ், பாலு, எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், பகுதி செயலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை