செந்தாரப்பட்டி ஏரி நிரம்பியது பாசன விவசாயிகள் மகிழ்ச்சி
செந்தாரப்பட்டி ஏரி நிரம்பியதுபாசன விவசாயிகள் மகிழ்ச்சிகெங்கவல்லி, அக். 17-கெங்கவல்லி அருகே, செந்தாரப்பட்டியில், 120 ஏக்கர் கொண்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. தொடர் மழை காரணமாக, ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால், ஏரியின் நீர் மட்டம் நேற்று உயர்ந்தது. ஏரி முழுவதும் நிறைந்ததால், உபரி நீர் வெளியேறும் பகுதியில் அதிகளவில் தண்ணீர் வெளியேறி வருகிறது. ஏரி மூலம், 500 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகிறது. பருவ மழை துவக்கத்திலேயே, செந்தாரப்பட்டி ஏரி முழுமையாக நிரம்பியதால், பாசன விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.