உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு வாழ்நாள் ஓய்வூதிய ஆணை வழங்கல்

விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு வாழ்நாள் ஓய்வூதிய ஆணை வழங்கல்

சேலம்,இ.எஸ்.ஐ., காப்பீட்டாளர்களுக்கு, தொழில்சார் நோய் அல்லது வேலை காரணமாக, இறப்பு நிகழும்போது, அவரது ஊதியத்தில், 90 சதவீதம் குடும்பத்தினருக்கு உதவித்தொகையாக, மாதந்தோறும், இ.எஸ்.ஐ., மூலம் வழங்கப்படுகிறது. அதன்படி, 'சூரியா பாலா எர்த் மூவர்ஸ்' நிறுவனத்தில் வேலை செய்த மோகன்ராஜ் என்பவர், பணியின்போது சாலை விபத்தில் கடந்த நவ., 1ல் மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தினருக்கு வாழ்நாள் ஓய்வூதியமாக, மாதந்தோறும், 6,768 ரூபாய் வழங்க, சேலம் இ.எஸ்.ஐ., துணை மண்டல இணை இயக்குனர் சிவராமகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்படி அதற்கான ஆணையை, இ.எஸ்.ஐ., கிளை மேலாளர் ஜெனோவா, சூரிய பாலா எர்த் மூவர்ஸ் மேற்பார்வையாளர் பிரின்ஸ் கில்பர்ட் ஆகியோர், மோகன்ராஜின் குடும்பத்தினரிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ