உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 65 அடி உயரத்தில் உலக ரட்சகர் இயேசு

65 அடி உயரத்தில் உலக ரட்சகர் இயேசு

வாழப்பாடி தொழிலதிபர் லாசர் அறிக்கை:பிரேசில் நாட்டில் உள்ள கர்போவாடோ மலைத்தொடரில், டைஜூரா வனப்பகுதி தேசிய பூங்காவில், 1932-ல் திறந்து வைக்-கப்பட்ட, 120 அடி உயர இயேசு கிறிஸ்து சிலையே, உலகில் மிக உயர்ந்தது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், மார்பெஷிலியஸ் இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் நிறுவப்பட்ட, 33 அடி உயர இயேசு சிலை, இந்தியாவில் மிக உயர்ந்ததாக இருந்தது.இந்நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தாப்-பூரில் சேலம்- - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில், நவீன பைபர் தொழில்நுட்-பத்தில், 65 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட உலக ரட்சகர் இயேசு சிலை, தற்போது இந்தியாவில் மிக உயர்ந்ததாக விளங்குகிறது. இது, 1957ல் கட்டப்பட்டு, 50 ஆண்டுக்கு மேலாக வழிபாட்டில் இருந்த புனித செபஸ்தியார் தேவாலயம், 2008ல், தேசிய நெடுஞ்-சாலை அமைக்கப்பட்டபோது அகற்றப்பட்டது.அப்போதைய சேலம் ஆயர் சிங்கராயர் முயற்சியால், அப்பகுதி-யிலேயே புது தேவாலயம் கட்டப்பட்டது. அதன் முகப்பில், வாழப்பாடி தொழிலதிபரான, டாக்டர் லாசர் குடும்பத்தினரால், 20 லட்சம் ரூபாய் செலவில், 15 அடி அகல பாதம், 5 அடி அகல முக அமைப்போடு, 65 அடி உயரத்தில், இயேசுவின் முழு உரு-வச்சிலை தத்ரூபமாக அமைக்கப்பட்டது. அச்சிலை, 2013 டிச., 21ல், ஆயர் சிங்கராயரால் அர்ச்சிப்பு செய்து, மக்கள் வழிபாட்-டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அச்சிலையை, பல்வேறு கிறிஸ்தவ தேவாலய திருப்பணி மேற்கொண்டு வரும் லாசர், 3 லட்சம் ரூபாய் செலவில் வண்ணம் தீட்டி, உயிரோட்டமாக புதுப்பித்தார். இந்த இயேசுநாதரை, கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்-பினரும் வழிபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி