ரியல் எஸ்டேட் ஆபீசில் நகை, பணம் திருட்டு
சேலம்: சேலம், சூரமங்கலம் ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்தவர் தங்கராஜ், 47. இவர், 5 ரோட்டில், ரியல் எஸ்டேட் அலுவலகம் வைத்துள்ளார். நேற்று முன்தினம் அலுவலகத்தை பூட்டிச்சென்ற நிலையில், நேற்று காலை திறக்க வந்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததால், அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, மேசை டிராயரில் இருந்த, 3 கிராம் தங்க நாணயம், ஒரு வெள்ளி கொலுசு, 45,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து அவர் புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.