உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்குவேலை வாய்ப்பு முகாம்சேலம், நவ. 5- சேலம் கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்ட அறிக்கை:சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா மண்டபத்தில், மண்டல அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் வரும், 9ல் காலை, 10:00 மணிக்கு நடைபெற உள்ளது. சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி திருப்பத்துார் மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, வேலைவாய்ப்பு வழங்க முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எட்டா-ம் வகுப்பு, அதற்கு மேல் கல்வி பயின்ற மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம். மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, தனித்துவம் மிக்க அடையாள அட்டை, ஆதார் அட்டை, கல்விச்சான்று, புகைப்படம் மற்றும் தன்விபரக்குறிப்பு ஆகியவற்றுடன் முகாம் நடைபெறும் நாளன்று நேரில் கலந்து கொள்ள வேண்டும்.மேலும் விபரம் பெற, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்ணில், 0427 2415242 தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை