ஜோலார்பேட்டை-ஈரோடு ரயில் இன்று தாமதம்
சேலம்: ஜோலார்பேட்டையிலிருந்து ஈரோடு வரும் ரயில், இன்று 40 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜோலார்பேட்டை-சேலம் வழித்தடத்தில் ககன்கரை, சாமல்பட்டி ரயில் நிலையங்களுக்கு வழித்தட பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இன்று மதியம், 2:45 மணிக்கு, ஜோலார்பேட்டையிலிருந்து கிளம்பும், ஜோலார்பேட்டை-ஈரோடு ரயில், அந்த இடத்தில், 40 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.