மேலும் செய்திகள்
முருகன் கோவில்களில் இன்று கந்த சஷ்டி துவக்கம்
22-Oct-2025
சேலம், சேலம், அம்மாபேட்டை செங்குந்தர் சுப்ரமணியர் கோவிலில், கந்தசஷ்டி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை ஒட்டி மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு, பால், தயிர், இளநீர் உள்பட பல்வேறு பொருட்களால் அபிேஷகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கொடிமரம் மற்றும் உற்சவர் சண்முகருக்கு சிறப்பு அபி ேஷகம் செய்து, மூலவர் முன், சேவல் கொடியை வைத்து பூஜை நடந்தது. காலை, 10:00 மணிக்கு பக்தர்களின், 'அரோகரா' கோஷம் முழங்க, குருக்கள், கந்தசஷ்டி விழா கொடியை ஏற்றி வைத்து மகா தீபாராதனையுடன் பூஜை செய்தார். உற்சவர் சண்முகர், தங்க மயில் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஓமலுார் செவ்வாய் சந்தை அருகே உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில், கந்த சஷ்டி விழா தொடங்கியது. செந்தில் ஆண்டவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. திரளான பெண்கள், கைகளில் கந்த சஷ்டி காப்பு கட்டி கொண்டனர்.ஆத்துார் அருகே வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில், மூலவர் பாலசுப்ரமணியருக்கு பல்வேறு அபி ேஷக பூஜை செய்யப்பட்டு, வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி காசி விஸ்வநாதர், தம்மம்பட்டி திருமண்கரடு பாலதண்டாயுதபாணி, சங்ககிரி, அக்கமாபேட்டை சுப்ரமணியர் கோவில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கியது.
22-Oct-2025