உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கைது

கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கைது

சேலம், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 100க்கும் மேற்பட்ட தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான 'டிட்டோஜாக்' அமைப்பினர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலாளர் திருமுருகவேள் தலைமையில் நேற்று, தி.மு.க., அரசு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், ஒரு லட்சம் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள, 243 அராசணையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை மைதானத்தில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, நுாற்றுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்து வேனில் ஏற்றி திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி