கார்த்திகை பிறப்பு எதிரொலி வேட்டி, மாலை விற்பனை
கார்த்திகை பிறப்பு எதிரொலிவேட்டி, மாலை விற்பனைசேலம், நவ. 16-------இன்று கார்த்திகை பிறக்கிறது. இதனால் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் மாலை அணிவித்து, விரதம் இருந்து செல்வர். இதனால் சேலம் சின்னக்கடைவீதி, டவுன், செவ்வாய்ப்பேட்டையில் உள்ள கடைகளில் ஐயப்பன் வேட்டி, மாலை, துண்டு உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. துளசி மாலை, 50 முதல், 200 ரூபாய், வேட்டி, 150 முதல், 200 ரூபாய், துண்டு, 50 ரூபாய் என, விற்பனை செய்யப்பட்டது. விரதம் இருக்க, இன்று டவுன் மற்றும் குரங்குச்சாவடியில் உள்ள ஐயப்பன் கோவில், ஐயப்பன் சன்னதி உள்ள கோவில்களில் பக்தர்கள் மாலை அணிந்து கொள்வர். சுகவனேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் மாலை அணிந்து கொள்வர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.