மேலும் செய்திகள்
சுகவனேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாக பூஜை
24-Nov-2024
சேலம், டிச. 14-சேலம் மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று நடந்தது. இதற்கு அதிகாலை, 6:00 மணிக்கு மூலவர் சுகவஸேஸ்வரர் ஸ்வர்ணாம்பிகை அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. சிவன், அம்மனுக்கு புத்தாடை அணிவித்து, பல்வேறு வாசனை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.சிவாச்சாரியார்கள், வேதங்கள் முழங்க, அர்ச்சனை நடத்தினர். தொடர்ந்து ஆராதனை உள்ளிட்ட வைபவம் நடைந்தது. மாலையில் உற்சவர் சோமாஸ்கந்தர், சண்முக சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்த பின், மூலவர் சன்னதியில் தீபம் ஏற்றி பூஜை நடந்தது. தொடர்ந்து உட்பிரகாரத்தில் சோமாஸ்கந்தர், சண்முக சுவாமி புறப்பாடு நடந்தது. பின் வெளி பிரகாரத்தில் திரளான பக்தர்கள் முன்னிலையில், சொக்கப்பனை எரிப்பு நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து கோவில் முன்புள்ள, 2 தீப துாண்களில், 'நமச்சிவாயா' என, பக்தர்களின் கோஷங்களுடன், சிவாச்சாரியார்கள், மகா தீபம் ஏற்றினர். பின் தீபாராதனை காட்டப்பட்டது. மகா தீபம், 2 நாட்கள் தொடர்ந்து எரியும் என, சிவாச்சாரியார் தெரிவித்தார்.இதையடுத்து உற்சவ மூர்த்தியான சோமாஸ்கந்தர், சண்முக சுவாமிகளை, பல்லக்கில் அமர்த்தி பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து திருவீதி உலா வைபவம், சின்னக்கடை வீதி, இரண்டாம் அக்ராஹாரம் வழியே வலம் வந்து மீண்டும் கோவிலை அடைந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைக்கு பின் தீபாராதனை காட்டப்பட்டது. இந்த வைபவத்தை கண்டு, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டை, அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.சொக்கப்பனை எரிப்புதாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இரவு, 9:00 மணிக்கு, சொக்கப்பனை, கொடி சேலை எரிப்பு நிகழ்ச்சி நடந்தது. ராஜகோபுரம், வரதராஜ பெருமாள் கோவில் முன் வைக்கப்பட்ட சொக்கப்பனையை, சிவாச்சாரியார்கள் எரித்தனர். தொடர்ந்து, 5 நிலை கொண்ட ராஜகோபுர உச்சியில், நெய்யில் ஊறவைத்த, 10 மீ., ண்ட கொடி சேலையை(காடா துணி) குச்சியில் கட்டி கொழுத்தினர். தீபம் கொழுந்து விட்டு எரிந்து, கோபுரத்தின் முன் விழுந்தது. இந்நிகழ்வை, ஏராளமான பக்தர்கள், 'அரோகரா' கோஷம் எழுப்பி தரிசித்தனர்.அண்ணாமலையார் கோவில்ஏற்காடு, தலைச்சோலை அண்ணாமலையார் கோவிலில், 150 லிட்டர் நெய், 100 மீட்டர் திரி பயன்படுத்தி மாலை, 6:00 மணிக்கு, தீபம் ஏற்றப்பட்டது. இது, தொடர்ந்து 5 நாட்கள் எரியும். ஏற்காடு முழுதும் கடும் பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்த நிலையிலும், ஏராளமானோர், தீபம் ஏற்றுவதை கண்டு அண்ணாமலையாரை தரிசித்தனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
24-Nov-2024