உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயில் அறிவிப்பு

காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயில் அறிவிப்பு

சேலம்: காசி தமிழ் சங்கம நிகழ்ச்சிக்கு சேலம் வழியே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை - பனாரஸ் சிறப்பு ரயில், வரும், 16ல், ஞாயிறு காலை, 6:35க்கு புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியே, செவ்வாய் காலை, 7:15க்கு பனாரசை அடையும்.மறுமார்க்க ரயில், வரும், 22 சனி அதிகாலை, 2:00 மணிக்கு கிளம்பி, திங்கள் காலை, 9:30க்கு கோவையை அடையும். இந்த ரயிலில், 3ம் வகுப்பு ஏசி பெட்டி - 9, ஸ்லீப்பர் பெட்டி - 7, இரண்டாம் வகுப்பு பெட்டி - 1 இணைக்கப்பட்டிருக்கும். இதற்-கான முன்பதிவு இன்று காலை, 8:00 மணிக்கு தொடங்கும் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை