குமரப்பா சில்க்ஸ் 2-வது ஷோரூம் இளம்பிள்ளையில் திறப்பு
இளம்பிள்ளை, சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில், ஸ்ரீகுமரப்பா சில்க்ஸின், 2-வது ஷோரூம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. சேலம் ஆதித்யா தோல் மருத்துவமனை மருத்துவர் ரவிச்சந்திரன், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இதில் வீரபாண்டி தொகுதி, முன்னாள் எம்.எல்.ஏ., மனோன்மணி, சேலம் ஏ.ஆர்.ஆர்.எஸ்., உரிமையாளர் ரவி, கண் மருத்துவர் சோழமாதேவி, பொன்னாகவுண்டர் ரவி, ஸ்வர்ணாம்பிகை பஸ் உரிமையாளர் பாலசுப்பிரமணி, பாரப்பட்டியை சேர்ந்த சுரேஷ்குமார், இளம்பிள்ளை டவுன் பஞ்சாயத்து தலைவி நந்தினி, ராஜகணேஷ், கன்னங்குறிச்சி டவுன் பஞ்சாயத்து தலைவர் குபேந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், மக்கள் பங்கேற்றனர். திறப்பு விழாவை முன்னிட்டு, 1,000 ரூபாய்-க்கு மேல் ஜவுளி வாங்குவோருக்கு சிறப்பு பரிசு, ரெடிமேட் ஆடைகளுக்கு, 10 சதவீத சிறப்பு தள்ளுபடி, 2,000 ரூபாய்-க்கு மேல் ஜவுளி வாங்குவோருக்கு, கார் பரிசுக்கான கூப்பன் வழங்கினர். மேலும் இந்த ஷோரூமில் திருமண பட்டு, காட்டன் சாரீஸ், பேன்ட், சர்ட் உள்ளிட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியருக்கு, பிடித்தமான ஜவுளி ரகங்கள் அனைத்தும் கிடைக்கும்.