உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கும்பாபிேஷகம் கோலாகலம்

கும்பாபிேஷகம் கோலாகலம்

மேட்டூர்: மேட்டூர், தங்கமாபுரிபட்டணத்தில் வரசித்தி விநாயகர், வலம்புரி விநாயகர், மோர் முனியப்பன், சக்தி வடபத்ரகாளியம்மன், சக்திமாரியம்மன் கோவில் உள்ளது. அக்கோவில் புனரமைப்பு பணி சமீபத்தில் முடிந்த நிலையில், நேற்று காலை, 7:30 முதல், 8:30 மணிக்குள் கும்பாபிேஷகம் கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர். காலை, 9:30 மணிக்கு மேல் மஹா அபி ேஷகம், அலங்காரம், தீபாராதனை, தசா தரிசனம், தசதானம், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தொடந்து சிறப்பு அன்னதானம் நடந்தது. இன்று முதல், 12 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய தேவஸ்தான கமிட்டியினர் செய்திருந்தனர்.தர்ம சாஸ்தாதலைவாசல் அருகே வீரகனுாரில் தர்ம சாஸ்தா ஐயப்பன், கணபதி கோவில் புதிதாக கட்டப்பட்டது. அக்கோவிலில் நேற்று, ஐயப்பன், கணபதி சிலைகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி ேஷகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல் வாழப்பாடி அடுத்த சின்னகவுண்டாபுரத்தில், சக்தி விநாயகர், சக்தி மாரியம்மன், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை