உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

சேலம், சேலம், அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஆயிரத்தக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள, அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபி ேஷக விழா கடந்த, 30ல், முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. கடந்த 3ல், தீர்த்தக்குட ஊர்வலத்துடன் முதல் கால யாக பூஜை தொடங்கியது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து, ஓம்சக்தி, பராசக்தி என முழக்கங்கள் ஒலிக்க, அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் மற்றும் பரிவார தெய்வங்களான விநாயகர், திரவுபதி அம்மன் கோவில்களிலும், கலசங்களுக்கு கும்பாபி ேஷகம் நடத்தப்பட்டது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி