உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மகுடஞ்சாவடி, மகுடஞ்சாவடி ஊராட்சிக்கு உட்பட்ட, நம்பியாம்பட்டி கிராமத்தில்கரிய காளியம்மன், வீரமாத்தி அம்மன், மகாமுனிஸ்வரர் கோவில் உள்ளது. கும்பாபிஷேகம் நேற்று காலை, 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் நடைபெற்றது.கடந்த 5ம் தேதி காலை சந்தைப்பேட்டையில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலுக்கு சென்ற பக்தர்கள், இறைவனை வணங்கி தாங்கள் கொண்டு சென்ற தீர்த்தக்குடங்களுடன் பசு, காளை, குதிரை, பம்பை உடுக்கை முன்னே செல்ல, 500-க்கும் மேற்பட்டவர்கள் கோவில் வரை சென்றனர்.நேற்று காலை, 4:00 மணி முதல் பல கட்டங்களாக சிவாச்சாரியார்கள் யாகசாலையில் அமர்ந்து யாக குண்டங்களில், 108 மூலிகைகளை குண்டத்தில் வைத்து யாகம் வளர்த்தனர். பின்னர் காலை 9:00 மணிக்கு தீர்த்தங்களை கோபுர கலசத்தில் ஊற்றி, கும்பாபி ேஷகம் நடந்தது. பின், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.ஆயிரக்கணக்கானோர் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர். முன்னதாக நேற்று முன்தினம் இரவு, இளைஞர்கள் கலந்து கொண்ட சிலம்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ