குறிஞ்சி பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் அபாரம்
நாமக்கல், நாமக்கல், காவேட்டிப்பட்டியில், 25 ஆண்டுகளுக்கு மேலாக குறிஞ்சி பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது. 2024- 25ம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது.இதில் அறிவியல் பாடப்பிரிவில் மாணவன் சக்தி, 593 மதிப்பெண்கள், ஆல்பினஸ் ரூவஸ், 591 மதிப்பெண்கள், மாணவி இனியா, 589 மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.இயற்பியலில், 9 பேர், வேதியியலில், 7 பேர், உயிரியலில், 3 பேர், கணிதத்தில், 6 பேர், கணினி அறிவியலில் ஒருவர், 100க்கு, 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 590 மதிப்பெண்களுக்கு மேல் இருவரும், 585 மதிப்பெண்களுக்கு மேல், 8 பேரும், 580 மதிப்பெண்களுக்கு மேல், 23 பேரும், 570 மதிப்பெண்களுக்கு மேல், 29 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல், 42 பேரும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 298 மதிப்பெண் பெற்ற உமா மகேஷ் என்ற மாணவனை, பிளஸ் 2 தேர்வில் 547 மதிப்பெண் பெற வைத்துள்ளனர்.இவர்களுக்கு பள்ளி தாளாளர் தங்கவேல் இனிப்பு வழங்கி பாராட்டினார். பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களை பாராட்டினர். அட்மிஷன் தொடர்புக்கு 93445 67484 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.