உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு நில அளவீடு பணி ஒத்திவைப்பு

சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு நில அளவீடு பணி ஒத்திவைப்பு

பனமரத்துப்பட்டி, மல்லுார் - வீரபாண்டி சாலையில், வேங்காம்பட்டியில், சேலம் - கரூர் அகல ரயில் பாதை உள்ளது. தினமும் பலமுறை ரயில்வே கேட் மூடப்படுவதால், பள்ளி, கல்லுாரி வாகனங்கள், பஸ், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள், அவசரத்துக்கு செல்ல முடியாமல் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் சுரங்கப்பாதை அமைக்க, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம், தனியாருக்கு ஒப்பந்தம் விட்டது. ஆனால் சுரங்கப்பாதை அமைக்க, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.அதேநேரம் சுரங்கப்பாதை பணியை தொடங்காத மத்திய அரசு, ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து, வரும், 28ல், வேங்காம்பட்டியில் ரயில் மறியல் போராட்டம் நடக்கும் என, சுற்றுவட்டார கிராம மக்கள் சார்பில், 'நோட்டீஸ்' வினியோகிக்கப்பட்டது.இந்நிலையில், ரயில்வே போலீஸ் பாதுகாப்புடன், வருவாய்த்துறையினர் நில அளவீடு செய்ய, நேற்று வந்தனர். அப்போது அம்பேத்கர் நகர் மக்கள் வந்து, 'சுரங்கப்பாதை அமைத்தால், வீடுகள் பாதிக்கப்படும்' என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். மல்லுார் போலீசார், பேச்சு நடத்தினர்.அதில், 'இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சு நடத்தப்படும். அதுவரை நில அளவீடு பணி ஒத்திவைக்கப்படும்' என கூறினர். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை