மேலும் செய்திகள்
பல்வேறு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை
21-Nov-2024
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் ஊராட்சி ஜருகுமலையில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. அதிகாலையில் மலைப்பாதையின், 3வது கி.மீ., வளைவில் மண் சரிவு ஏற்பட்டது.இதனால் அந்த வழியே செல்லவே மக்கள் அச்சப்பட்டனர். மேலும் சந்தியூர் ஊராட்சியில், அரசு நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவர், 50 மீ., நீளத்துக்கு நேற்று காலை இடிந்து விழுந்தது. பள்ளி விடுமுறை என்பதால் எந்த பாதிப்பும் இல்லை. இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'ஜருகுமலையில் ஏற்பட்ட மண் சரிவை, ஊராட்சி நிர்வாகம் மூலம் உடனே சரிசெய்யப்பட்டது. சந்தியூர் அரசு நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்ட ஏற்பாடு செய்யப்படும்' என்றனர்.
21-Nov-2024