உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் /  சிறுத்தை நடமாட்டம்: மாதேஸ்வரன் மலைக்கு பக்தர்கள் செல்ல தடை

 சிறுத்தை நடமாட்டம்: மாதேஸ்வரன் மலைக்கு பக்தர்கள் செல்ல தடை

மேட்டூர்: சிறுத்தை நடமாட்டத்தால், மாதேஸ்வரன் மலைக்கு பக்தர்கள் செல்ல, தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவில், பிரசித்தி பெற்ற, மாதேஸ்வரன் மலை கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு செல்ல, தமிழக எல்லையிலுள்ள பாலாற்றில் இருந்து, 17 கி.மீ., வனப்பகுதியை கடக்க வேண்டும். மறுபக்கம், கர்நாடகா, ஹனுார் தாலுகா, தாளபெட்டாவில் இருந்து, 8 கி.மீ., வனப்பகுதியை கடக்க வேண்டும். கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பக்தர்கள் நடைபயணமாக மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு செ ல்வர். நேற்று முன்தினம் அதிகாலை, 5:30 மணிக்கு தாளபெட்டாவில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு, வனப்பகுதி சாலையில் நடந்து சென்ற, பிரவீன், 32, என்பவரை சிறுத்தை, தாக்கி கொன்றது. இதைய டுத்து, வனப்பகுதியில் சுற்றித்திரியும் அந்த சிறுத்தையை பிடிக்க, வனச்சரகம் சார்பில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, நேற்று காலை முதல், 4 நாட்கள் வரை பாலாறு எல்லையில் இருந்தும், தாளபெட்டாவில் இருந்தும் மாதேஸ்வரன் மலைக்கு, பக்தர்கள் செல்ல, வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !