உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

மேட்டூர்:கொளத்துார், கண்ணாமூச்சி காப்புக்காடு, ராமன்பட்டி பீட் எல்லைக்குட்பட்ட நெடுஞ்செழியன் நகரில், 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் செய்கின்றனர். அங்கு, அருகே உள்ள சென்னம்பட்டி வனச்சரகத்தில் இருந்து ஒரு சிறுத்தை வந்து, 10 நாட்களாக சுற்றித்திரிகிறது. இரு நாட்களுக்கு முன் ஒரு ஆட்டை கடித்து கொன்றது. இதை அறிந்த மேட்டூர் சரக வனத்துறையினர், நெடுஞ்செழியன் நகருக்கு சென்று பட்டாசு வெடித்து சிறுத்தையை விரட்டிவிட்டனர். இந்நிலையில் வனத்துறை சார்பில், கண்ணாமூச்சி மக்களுக்கு, எச்சரிக்கை துண்டு பிரசுரம் சில நாட்களாக வழங்கப்படுகின்றன. அதில், 'வனப்பகுதிகளில் மக்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம்; இரவில் மக்கள் தனியே நடமாட வேண்டாம்; குழந்தைகள், பெரியவர்கள், மாலை, 6:00 மணிக்கு மேல் வெளியே வர வேண்டாம்; கால்நடைகளை பட்டியில் அடைத்து பாதுகாக்க வேண்டும்; அடையாளம் தெரியாத விலங்குகள் நடமாட்டம் தெரிந்தால் வன அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை