உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சமுதாயத்தில் அமைதியை ஏற்படுத்துபவர்களாக வாழ்வோம்

சமுதாயத்தில் அமைதியை ஏற்படுத்துபவர்களாக வாழ்வோம்

சேலம், குண்டுக்கல்லுார், நோட்டர் டேம் ஆப் ஹோலி கிராஸ் பள்ளி முதல்வர், தாளாளர் மரியசுரேஷ் அறிக்கை:கிறிஸ்துமஸ் பண்டிகை என்றதும் நம் அனைவரது நினை-வுக்கும் வருவது, அன்பு, பகிர்வு, சமாதானம், அமைதி ஆகி-யவை தான். கிறிஸ்துமஸ் விழா, மனித குல மீட்பின் பெருவிழா. ஏனெனில் நம் விண்ணக தந்தை, அவரது ஒரே மகனை இவ்வு-லகில் அமைதியின் துாதுவராய் பிறக்க செய்தார். இயேசு கிறிஸ்து மனிதர்களை பாவத்தில் இருந்து மீட்பதற்காகவும், மண்ணுலகில் அமைதி, சமாதானத்தை ஏற்படுத்தவும் மனிதனாக பிறந்தார்.உலகம் இன்று, அமைதி, சமாதானம், சகிப்புத்தன்மை இன்றி, பணம், பதவியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. நாடுகள் இடையே போர், உறவுகள் இடையே சண்டை சச்சரவுகள், சமுதா-யத்தில் பிளவு என, அமைதியற்ற நிலையில் இருக்கிறோம்.அமைதியில் வாழ, இயேசு கிறிஸ்து விரும்புகிறார். ஏனெனில் அமைதியின் அரசர் அவர். அமைதி நிறைந்த வாழ்க்கை தான், மகிழ்ச்சி நிறைந்தது. அந்த அமைதியை இயேசு கிறிஸ்துவால் மட்டுமே தர முடியும். அயலாரை அன்பு செய்யும்போதும், ஏழை-களுக்கு கொடுத்து உதவும்போதும், நம் மனம் அமைதி பெறுகி-றது. மகிழ்ச்சி கொள்கிறது.இயேசு கிறிஸ்து பிறந்த இந்த கிறிஸ்துமஸ் நன்னாளில், சமுதா-யத்தில் அமைதியை ஏற்படுத்துபவர்களாக நாம் வாழ்வோம். நோயுற்றோர் நலம் பெறவும், ஆதரவற்றோர் அரவணைக்கப்ப-டவும், சிறைபட்டோர் விடுதலை வாழ்வு பெறவும், ஒடுக்கப்-பட்டோர் உரிமை வாழ்வு பெறவும், இறை இயேசுவிடம் ஜெபிப்போம். பிறந்திருக்கும் இயேசு பாலன், உங்களையும் உங்கள் குடும்பங்களையும், அமைதியால் நிரப்பி ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி