எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்
ஓமலுார்: ஓமலுார் எல்.ஐ. சி.,அலுவலகம் முன், முகவர்கள் சங்க தலைவர் தனக்-கோடி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், கமிஷன் குறைப்பு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு பாலிசி திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். குறைந்த வருமான உள்ளவர்கள் பயன்பெறும் வகையில், ஒரு லட்சம் ரூபாய் பாலிசி திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 50க்கும் மேற்பட்ட முக-வர்கள் பங்கேற்றனர்.