| ADDED : ஜூன் 19, 2024 01:56 AM
வீரபாண்டி, மாவட்டம் முழுவதும் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான, 'எண்ணும் எழுத்தும்' இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது.கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் முதல் பயிற்சியாக, சேலம் மாவட்டத்தில் உள்ள, 20 ஒன்றியங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட, 130 ஆசிரியர்களுக்கு சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள, மாவட்ட அரசு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தில் 'எண்ணும் எழுத்தும்' இரண்டு நாள் பயிற்சி வகுப்பு துவங்கியது. முதன்மை கல்வி அலுவலர் பத்மநாபன் துவக்கி வைத்தார்.முதல் கட்டமாக, ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்கள் புதிய மற்றும் எளிய முறையில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் குறித்து பயிற்சி வழங்கப்படும். நாளை மற்றும் நாளை மறுநாள் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி வகுப்பு நடத்தப்படும். சுழற்சி முறையில், தொடக்கப்பள்ளிகளை சேர்ந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, மாநில கருத்தாளர் கலைவாணன் ஆகியோர் பயிற்சி வகுப்பை நடத்தினர். ஏற்பாடுகளை விரிவுரையாளர்கள் ரமேஷ்குமார், சுகன்யா உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.