உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லாரி - பைக் மோதல்: சிவில் இன்ஜினியர் பலி

லாரி - பைக் மோதல்: சிவில் இன்ஜினியர் பலி

ஓமலுார், சேலம், மல்லமூப்பம்பட்டியை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 31. சிவில் இன்ஜினியர். இவரது மனைவி சரண்யா, 28. ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று மதியம், 2:30 மணிக்கு தமிழ்செல்வன், 'பல்சர்' பைக்கில் தாரமங்கலத்தில் இருந்து, ஹெல்மெட் அணியாமல் புறப்பட்டார். பெருமாள் கோவில் மேடு அருகே சென்றபோது, எதிரே ஒரு வழிப்பாதையில் வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் தமிழ்செல்வன் உயிரிழந்தார். லாரியை விட்டு தப்பி ஓடிய டிரைவர் குறித்து, தொளசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். நெடுஞ்சாலையில் கோடுகள் அமைக்கும் பணியால், ஒரே வழியில் வாகனங்கள் இயக்கப்பட்ட நிலையில், விபத்து நேர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை