உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுமிக்கு தொந்தரவு லாரி கிளீனர் கைது

சிறுமிக்கு தொந்தரவு லாரி கிளீனர் கைது

ஆத்துார்: கெங்கவல்லியை சேர்ந்த, 16 வயது சிறுமி, 8ம் வகுப்பு வரை படித்துவிட்டு, பெற்றோருடன் கூலி வேலைக்கு சென்று வரு-கிறார். கடந்த செப்., 5ல், சிறுமியை காணாததால், அவரது பெற்றோர், ஆத்துார் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதுகு-றித்து வழக்குப்பதிந்து, போலீசார் தேடினர்.விசாரணையில் கெங்கவல்லியை சேர்ந்த, லாரி கிளீனரான லோக-நாதன், 23, என்பவர், சிறுமியை கடத்தியதும், சில நாட்களுக்கு முன் அவரை, அவரது வீட்டிற்கு அனுப்பியதும் தெரிந்தது. மேலும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததும் தெரியவந்தது. அவரை தேடியபோது, திருப்பூரில் இருப்பது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார், லோகநாதனை நேற்று கைது செய்து அழைத்து வந்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ