உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அறுவடை நிறைவால் திரும்பும் இயந்திரங்கள்

அறுவடை நிறைவால் திரும்பும் இயந்திரங்கள்

மேட்டூர்: கர்நாடகாவின் காவிரி கரையோரம் உள்ள சாம்ராஜ் நகர், மாண்டியா, மைசூரு, குடகு உள்-ளிட்ட மாவட்டங்களிலும், அதன் அருகே உள்ள மாவட்டங்களிலும் கடந்த ஜூலை இறுதி, ஆகஸ்ட் தொடக்கத்தில் நெல் சாகுபடி துவங்-கினர். குறிப்பாக பொன்னி நெல் அதிகளவில் சாகுபடி செய்தனர். நடப்பு மாதம் அறுவடை செய்ய தொடங்கினர். அதற்கு தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, ஆத்துார் பகுதிகளில் இருந்து, நெல் அறுவடை இயந்திரங்கள், மேட்டூர் அடுத்த மாதேஸ்வரன் மலை வழியே கர்நாடகாவுக்கு சென்றன. தற்-போது அறுவடை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பணி முடித்த இயந்திரங்களுடன், அதன் உரிமையாளர்கள், மாதேஸ்வரன் மலை, மேட்டூர் வழியே, ஆத்துார், கள்ளக்குறிச்சிக்கு கொண்டு செல்ல தொடங்கியுள்ளனர். சில நாட்களாக தினமும் கர்நாடகாவில் இருந்து, 20 நெல் அறு-வடை இயந்திரங்கள், மேட்டூர் வழியே செல்கின்-றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை