உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

சேலம்: ஆத்துார் அருகே ராமநாயக்கன்பாளையம், காராமணிதிட்டையை சேர்ந்த சகோதரர்கள் கண்ணையன், 75, கிருஷ்ணன், 70. இவர்களின், 6.5 ஏக்கர் நிலத்தை, பா.ஜ.,வின் சேலம் கிழக்கு மாவட்ட செயலர் குணசேகரன், அமலாக்கத்துறை உதவியுடன் அபகரிக்க முயற்சிப்பதாக, மா.கம்யூ., குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு குணசேகரன், 'குத்தகை நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளதால் கடன் தொகையை திரும்ப கேட்டோம். அதனால் பொய் புகார் கூறுகின்றனர்' என, விளக்கம் அளித்துள்ளார். எனினும் இரு விவசாயிக்கு ஆதரவாக, மா.கம்யூ., சார்பில் நேற்று, சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கட்சியினர் பலரும், பா.ஜ., நிர்வாகிக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி