உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மதுக்கடையை முற்றுகையிட்டு மா.கம்யூ., போராட்டம்

மதுக்கடையை முற்றுகையிட்டு மா.கம்யூ., போராட்டம்

சேலம்:சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, 5 டாஸ்மாக் கடைகள் அடுத்தடுத்து உள்ளன. இந்த கடைகளால் மக்கள், பயணியர் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அங்குள்ள மெய்யனுார் அரசு பஸ் பணிமனை எதிரே உள்ள மதுக்கடை, நேற்று மதியம் திறக்கப்பட்டது. உடனே, மா.கம்யூ., வடக்கு மாநகர் செயலர் பிரவீன்குமார் தலைமையில் கட்சியினர், அந்த கடைக்கு பூட்டுப்போட முயன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பேச்சுவார்த்தைக்கு வராத அதிகாரிகளுக்கு உப்பு வழங்குவதாக கூறி கையில் வைத்துக்கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பின் பள்ளப்பட்டி போலீசார் பேச்சு நடத்தி கலைந்து போகச்செய்தனர். பிரவீன்குமார் கூறுகையில், ''புது பஸ் ஸ்டாண்டை சுற்றி, 5 மதுக்கடைகள் உள்ளன. அதில், 2 கடைகள் மூடப்படும் என உறுதி அளித்தும் நடவடிக்கை இல்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி