உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

வீரபாண்டி: வீரபாண்டி, அங்காளம்மன் கோவிலில் மகா சிவராத்திரி மற்றும் மயான கொள்ளை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.வீரபாண்டி, அங்காளம்மன் கோவில் மகா சிவராத்திரியையொட்டி, 5 நாட்கள் நடக்கும் திருவிழா நேற்று காலை கணபதி யாகம் நடத்தி, கோவில் கொடி மரத்துக்கு அபிேஷகம் செய்து, மஞ்சள், குங்குமம், சந்தனம் மற்றும் பல வண்ண மலர் மாலைகளால் அலங்கரித்து காலை, 9:00 மணிக்கு திரிசூல கொடி ஏற்றி முறைப்படி திருவிழா துவங்கியது.மாலையில் மாசி மாத பிரதோஷத்தையொட்டி, நந்தியம்பெருமானுக்கு அபிேஷகம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. இன்று சிவராத்திரியையொட்டி, இரவு முழுவதும் சிவ சகஸ்ர நாம அர்ச்சனை, திருவாசகம் முற்றோதல் பக்தர்களால் பாராயணம் செய்யப்படும்.நாளை (பிப்.,27) காலை 4:00 மணிக்கு சக்தி அழைத்தல் நடக்கிறது. மதியம் சக்தி கரக ஊர்வலம், ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடக்கிறது. பிப்.,28 காலை பிள்ளைப்பாவு எடுக்கும் ஊர்வலம், இரவு மயான கொள்ளை, தக்கனுக்கு உயிர் கொடுத்தல் ஆகியவை நடைபெறும். மார்ச், 1ல் கொடி இறக்கம் மஞ்சள் நீராட்டு உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை