உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பங்க் பெண் ஊழியரை தாக்கியவர் கைது

பங்க் பெண் ஊழியரை தாக்கியவர் கைது

நங்கவள்ளி, நங்கவள்ளியை சேர்ந்த, ராஜிவ்காந்தி மனைவி ப்ரியா, 32. நங்கவள்ளியில் உள்ள, 'பெட்ரோல் பங்க்'கில் பணிபுரிகிறார். அங்கு கடந்த, 9 இரவு, 7:00 மணிக்கு, 'போதை'யில் வந்த ஒருவர், வாகனத்தை, 'ஆப்' செய்யாமல், பெட்ரோல் போடச்செல்லி தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து அருகே உள்ள மற்றொரு பம்பில் பெட்ரோல் போட்டுவிட்டு, சிறிது நேரத்தில் மற்றொருவரை அழைத்து வந்து, பங்க் பெண் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டதோடு தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த ப்ரியா, மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் நங்கவள்ளி போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கில், ஓமலுார், மேட்டூர் பிரிவு சாலையை சேர்ந்த பரத், 20, மேட்டூர், கரட்டுப்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன், 29, மீது நேற்று முன்தினம், பெண் கொடுமை வழக்குப்பதிந்தனர். இதில் மகேந்திரனை நேற்று, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ