உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மும்பையில் போதை மாத்திரை வாங்கி வந்து விற்றவர் கைது

மும்பையில் போதை மாத்திரை வாங்கி வந்து விற்றவர் கைது

சேலம், சேலம், கோரிமேடு அருகே செட்டிச்சாவடியை சேர்ந்தவர் சங்கர்குரு, 24. இவர், அன்னதானப்பட்டி, மூலப்பிள்ளையார் கோவில் அருகே போதை மாத்திரை விற்பதாக கிடைத்த தகவலால், அங்கு சென்ற அன்னதானப்பட்டி போலீசார், அவரை பிடித்து சோதனை செய்ததில், 94 மாத்திரைகள் வைத்திருந்தார். ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரித்ததில், மும்பையில் மாத்திரைகளை வாங்கி, ஒரு மாத்திரை, 300 ரூபாய்க்கு விற்றது தெரிந்தது. இந்த மாத்திரையை ஊசி மூலம் செலுத்தி பயன்படுத்துவதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதில் மேலும், 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதால், தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ