உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நகையை திருடி அடகு வைத்து டிவி, ப்ரிட்ஜ் வாங்கியவர் கைது

நகையை திருடி அடகு வைத்து டிவி, ப்ரிட்ஜ் வாங்கியவர் கைது

பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி, ஏரிச்சாலை, சங்கர் நகரை சேர்ந்தவர் அரவிந்தன், 32. அதே பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் மெக்கானிக்காக உள்ளார். இவரது வீட்டில், கடந்த, 19ல், பீரோவில் இருந்த, 4 பவுன் நகையை காணவில்லை என, பனமரத்துப்பட்டி போலீசில் புகார் அளித்தார். கதவின் பூட்டு, பீரோ பூட்டு உடைக்கப்படாத நிலையில், நகை மாயமானது எப்படி என, போலீசார் விசாரித்ததில், அரவிந்தனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் டிரைவர் ராஜ்குமார், 28, திருடியது தெரிந்து, நேற்று போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ராஜ்குமாருக்கு கடன் பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் அரவிந்தனின் மனைவி துணி எடுக்க மாடிக்கு சென்றபோது, பீரோவில் இருந்த நகையை, ராஜ்குமார் திருடியுள்ளார். அதை, 2.50 லட்சம் ரூபாய்க்கு ஒரு இடத்தில் அடகு வைத்து, ஏற்கனவே ஒருவரிடம் வாங்கிய, 50,000 ரூபாயை திருப்பி செலுத்தி உள்ளார். தொடர்ந்து அவரது வீட்டுக்கு, 'டிவி' பிரிட்ஜ் வாங்கியுள்ளார். இதில் சந்தேகம் ஏற்பட்டு, அவரை பிடித்து விசாரித்ததில், நகை திருடியதை ஒப்புக்கொண்டதால் கைது செய்யப்பட்டார். மேலும் அடகு வைத்த, 4 பவுன் நகையை மீட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !