உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பைக் திருட்டு வழக்கில் ஆஜராகாமல் இருந்தவர் கைது

பைக் திருட்டு வழக்கில் ஆஜராகாமல் இருந்தவர் கைது

கெங்கவல்லி: தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லுார், ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் அல்லிமுத்து, 25. 2023 மார்ச், 21ல், சேலம், தம்மம்பட்டி, காந்தி நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு, கோவில் திருவிழாவை ஒட்டி வந்தார். பின் மது அருந்த கெங்கவல்லி சென்றபோது, நடுவ-லுாரை சேர்ந்த, ராஜேந்திரன் என்பவரது, 'டி.வி.எஸ்., - ஸ்போர்ட்' பைக்கை திருடினார்.அவரை, கெங்கவல்லி போலீசார் கைது செய்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த அவர், ஆத்துார் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில், இரு ஆண்டாக ஆஜராகவில்லை. இதனால் நீதிமன்றம், பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில் தம்மம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று வந்த அவரை, போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை