உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / யாசகரை கொன்றகொத்தனார் கைது

யாசகரை கொன்றகொத்தனார் கைது

பெத்தநாயக்கன்பாளையம் பெத்தநாயக்கன்பாளையம், வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் பெரிய சாமி, 65. திருமணமாகாத இவர், பேளூர், தான்தோன்றீஸ்வரர் கோவில் பகுதியில் யாசகம் எடுத்து வாழ்ந்து வந்தார். நேற்று முன்தினம் அவரது வீட்டில், கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஏத்தாப்பூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்ததில், வெள்ளாளப்பட்டி, மதுரை வீரன் கோவில் தெருவை பாலமுருகன் மகனான, கொத்தனார் பா.பெரியசாமி, 19, 'போதை'யில் யாசகர் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டதோடு, துண்டால் கழுத்தை நெரித்து கொன்றது தெரிந்தது. அவரை நேற்று, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி