உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பட்டாசு வெடித்த தகராறு 3 பேரை குத்தியவர் கைது

பட்டாசு வெடித்த தகராறு 3 பேரை குத்தியவர் கைது

ஆத்துார், ஆத்துார், காட்டுக்கோட்டையை சேர்ந்தவர், சின்னசாமி, 43. இவரது மகள் காவ்யா, 15. இவர், கடந்த, 20ல், பட்டாசு வெடித்தபோது, அதே பகுதியை சேர்ந்த, திருமால்வளவன், 25, தட்டிக்கேட்டார். அதில் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. திருமால்வளவன், அவரது பெற்றோர் காமராஜ், ஜெயம் ஆகியோரை, சின்னசாமி கத்தியால் குத்தினார். மூவரும், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருதரப்பு புகாரில், ஆத்துார் ஊரக போலீசார், 4 பேர் மீது வழக்குப்பதிந்தனர். இதில் சின்னசாமியை நேற்று, போலீசார் கைது செய்தனர்.தொழிலாளி கைதுஆத்துார், புங்கவாடியில், சிறுவர்கள் பட்டாசு வெடித்தபோது, அதே ஊரைச் சேர்ந்த, கூலித்தொழிலாளி அழகேசன், 50, திட்டி தாக்கியுள்ளார். ஆத்துார் ஊரக போலீசார், நேற்று அழகேசனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !