உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபட்டில் இருந்து விழுந்தவர் பலி

மொபட்டில் இருந்து விழுந்தவர் பலி

தலைவாசல், தலைவாசல், நாவலுாரை சேர்ந்தவர் வீரமணி, 56. சில்லிக்கடை வைத்து தொழில் செய்தார். நேற்று காலை, 9:00 மணிக்கு, வீரகனுார் நோக்கி, 'ஸ்கூட்டி' மொபட்டில், ஹெல்மெட் அணியாமல் புறப்பட்டார்.வீ.ராமநாதபுரம் பஸ் ஸ்டாப் பகுதியில் சென்றபோது, சாலை பள்ளத்தில் மொபட்டில் இருந்து தடுமாறி விழுந்த வீரமணி படுகாயம் அடைந்தார். சில நிமிடத்தில் அங்கேயே உயிரிழந்தார். வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !