உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டவர் கைது

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டவர் கைது

வீரபாண்டி:ஆட்டையாம்பட்டி அருகே இருசனாம்பட்டியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ், 29. இவர் மீது பல்வேறு ஸ்டேஷன்களில், 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 7 வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்த ரவி, 40, என்பவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம், மொபைல் போனை, ஜெயப்பிரகாஷ் பறித்துள்ளார். அவர் புகார்படி போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் நேற்று மதியம் எஸ்.பாப்பாரப்பட்டி அருகே வாகனச்சோதனையின் போது, ஜெயப்பிரகாஷ் போலீசில் சிக்கினார். அவரை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ