உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேலாளர், ஜவுளி வியாபாரி மாயம்

மேலாளர், ஜவுளி வியாபாரி மாயம்

தாரமங்கலம்: தாரமங்கலம், கே.ஆர்.தோப்பூர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் பிரம்மநாயகம், 27. சேலம் பால் பண்னை அருகே உள்ள பிளாஸ்டிக் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார்.கடந்த, 12ல் வேலைக்கு செல்வதாக மனைவியிடம் கூறி புறப்பட்டார். ஆனால் அந்த நிறுவன உரிமையாளர், பிரம்மநாயகம் வேலைக்கு வரவில்லை என, அவரது மனைவி பெமிலா பிளஸ்சியிடம் தெரிவித்துள்ளார்.பின் அவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டபோது, அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் எங்கு தேடியும் கிடைக்காததால், பெமிலா பிளஸ்சி புகார்படி, தாரமங்கலம் போலீசார் தேடுகின்றனர்.சேலம், கொண்டலாம்பட்டி முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த, ஜவுளி வியாபாரி மகேந்திரகுமார், 42. இவர் கடந்த, 13ல், வியாபாரத்துக்கு பெங்களூரு சென்ற நிலையில் திரும்பி வரவில்லை. அவரது குடும்பத்தினர் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவரது தந்தை சித்துராஜ், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை