உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாநில யோகா போட்டி ஏராளமானோர் ஆர்வம்

மாநில யோகா போட்டி ஏராளமானோர் ஆர்வம்

சேலம், இந்திய யோகா சங்கம், தமிழக கிளை, தனியார் யோகா பயிற்சி மையம் சார்பில், மாநில யோகா போட்டி, சேலம், நெத்திமேடு அருகே, தனியார் கல்லுாரியில் நேற்று நடந்தது. 3 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திறந்தநிலை, சிறப்பு நிலை, சாம்பியன் ஆப் சாம்பியன், ரிதமிக் யோகாவில் தனி மற்றும் குழு; ஆர்டிஸ்டிக் யோகாவில் தனி மற்றும் குழு, யோகா சேலஞ்ச் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதுகுறித்து சங்கத்தினர் கூறுகையில், 'பாரம்பரிய கலையை, எதிர்கால தலைமுறையிடம் கொண்டு செல்ல போட்டி நடத்தப்பட்டது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ