உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஊர்வலத்துக்கு தடை

ஊர்வலத்துக்கு தடை

சேலம் மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் நங்கவள்ளி, ஜலகண்டாபுரத்தில், 7 சிலைகள் வைக்கப்பட்டன. நேற்று மதியம் மாவட்ட செயலர் மணிகண்டன் தலைமையில் புதுாரில், 5க்கும் மேற்பட்ட வாகனங்களில் சிலைகளை வைத்து பூஜை செய்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டனர். ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் சென்றபோது, அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி ஊர்வலம் செல்லக்கூடாது என அறிவுறுத்தினர். பின் ஒன்றன் பின் ஒன்றாக, திப்பம்பட்டிக்கு கொண்டு சென்று கரைக்கச்செய்தனர்.அன்னதானம்ஆத்துார், ராணிப்பேட்டை செல்வ விநாயகர் கோவிலில் இரு சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். தொடர்ந்து நேற்று அன்னதானம் வழங்கப்பட்டது. அதில், 3,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அறுசுவை உணவுகளுடன், 11 வகை உணவுகள் வழங்கினர். மேலும் விநாயகருக்கு படையல் வைத்திருந்த, 75 கிலோ லட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை