உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

இடைப்பாடி:இடைப்பாடி, சக்தி நகரில் உள்ள ராஜகணபதி, சமயபுர மாரியம்மன் கோவில் திருப்பணி முடிந்து, கும்பாபிஷேக விழாவுக்கு கடந்த, 23ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது. நேற்று முன்தினம் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. காவிரி ஆற்றில் இருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீரை, கோபுர கலசம் மீது தெளித்து கும்பாபி ேஷகம் நடத்தி வைக்கப்பட்டது. பின் கூடியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. கோவில் நிர்வாகத்தினர் உள்பட ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல் இடைப்பாடி, கவுண்டம்பட்டி புலியாத்தம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்க கூடம் கட்டடப்பட்டது. இதை ஒட்டி, புலியாத்தம்மன் சுவாமி வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ