உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மர மில்லில் பயங்கர தீ; சேத மதிப்பு ரூ.2 கோடி

மர மில்லில் பயங்கர தீ; சேத மதிப்பு ரூ.2 கோடி

சேலம்: சேலம், சன்னியாசிகுண்டை சேர்ந்தவர் சந்தோஷ். அதே பகுதியில் மரம் அறுக்கும் ஆலை நடத்துகிறார். மில்லில் நேற்று முன்தினம் இரவு தீப்பற்றி எரிந்தது. தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் சேலம் மட்டுமின்றி பிற பகுதிகளில் இருந்து, தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. எட்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்ட நிலையில், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு தீ கட்டுக்குள் வந்தது. கிச்சிப்பாளையம் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், 50 லட்சம் ரூபாய்க்கு சேதம் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், குடோனில் இருந்த கதவு, ஜன்னல் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட மர பொருட்கள் முழுதும் எரிந்து நாசமானதால், 2 கோடி ரூபாய் சேத மதிப்பு இருக்கும் என தெரியவந்தது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ