உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரியில் இயந்திரவியல் மாணவர் சங்கம் தொடக்கம்

நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரியில் இயந்திரவியல் மாணவர் சங்கம் தொடக்கம்

சேலம், சேலம், நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரியில், இயந்திரவியல் துறையின் மாணவர் சங்க தொடக்க விழா நடந்தது. அக்கல்லுாரி அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் தலைமை வகித்தார். அதில் பெங்களூருவை சேர்ந்த நாதன் அண்ட் நாதன் குளோபல் நிறுவன, இணை பங்குதாரர் வேங்கடசுப்பிரமணியம், முதன்மை ஆலோசகர் பிரசன்ன குமார், தலைமை பயிற்சியாளர் ராம்கி விஜயன், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.கல்லுாரி முதல்வர் விசாகவேல் பேசுகையில், ''தன்னாட்சி பாடத்திட்டம் மூலம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், அதை சார்ந்த நிபுணர்களால் கற்பிக்கப்படுகிறது. இத்தகைய பாடங்கள், மாணவர்களை தொழில் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்ப சிறப்பாக தயார் செய்து முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப்பெற உதவுகிறது,'' என்றார்.இயந்திரவியல் துறை தலைவர் பிரபாகரன், மாணவர்களின் சாதனைகளை விவரித்தார். மாணவர் சங்கத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார். செயலர் தனபாலாஜி, சங்கம் மூலம் இந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து விளக்கினார். கல்லுாரியின் வேலைவாய்ப்புத்துறை இயக்குனர் ராஜேந்திரன், இயக்குனர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை