மேலும் செய்திகள்
ஜி.எஸ்.டி.யில் சலுகை; வர்த்தகர்கள் வரவேற்பு
2 hour(s) ago
சேலம் :எல்.ஐ.சி., ஹெல்த் இன்சூரன்ஸ் வரி விலக்கு, மருந்து பொருட்களுக்கு வரி குறைப்பால், மருத்துவ சிகிச்சை கட்டணம் குறையும் என, தொழில் துறையினர் தெரிவித்தனர்.டில்லியில் கடந்த, 3ல் நடந்த, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், 5 மற்றும் 18 சதவீதம் என்ற, இரு புதிய விகிதங்களில் மட்டும் வரி வசூலிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தொழில் துறையினர் தெரிவித்த கருத்துகள் விபரம் வருமாறு:'வரவேற்கத்தக்கது'மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தன்ராஜ்: லாரியின் சேசிங் உள்ளிட்டவற்றுக்கு, 28ல் இருந்து, 18 சதவீதமாக, ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளது. இதனாலும், உதிரி பாகங்களுக்கான, ஜி.எஸ்.டி., குறைப்பாலும், லாரி உரிமையாளர்களுக்கு பயன் கிடைக்கும்.இது வரவேற்கத்தக்கது. மருத்துவ காப்பீடு உள்ளிட்டவற்றுக்கு விலக்கு கொடுத்த நிலையில், லாரிக்கான காப்பீடுக்கும் வரி மாற்றம் அல்லது விலக்கு அளித்திருந்தால், கூடுதல் நன்மை கிடைத்திருக்கும்.'ஏமாற்றத்தை தருகிறது'சேலம், கொண்டலாம்பட்டி பட்டு ஜவுளி உற்பத்தியாளர் சங்க முன்னாள் தலைவர் பலராமன்: கொண்டலாம்பட்டி பகுதிகளில் உற்பத்தியான பட்டு ஜவுளிகள், பல மாநிலங்களில் பிரசித்தி பெற்று விளங்கின.தற்போது பட்டு விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு சவால்களால் மிகவும் நலிந்த நிலையில் உள்ளது. பட்டுக்கு விதிக்கப்பட்ட, 5 சதவீத ஜி.எஸ்.டி.,யை விலக்க வேண்டும் என, பல ஆண்டாக வலியுறுத்துகிறோம். ஆனால் இம்முறையும் விலக்கு அளிக்காதது ஏமாற்றத்தை தருகிறது.'பெரிய மாற்றம் ஏற்படாது'சேலம் மாவட்ட சிறு, குறு தொழில் சங்க தலைவர் மாரியப்பன்: ஜி.எஸ்.டி., மாற்றத்தால், சிறு, குறு தொழில்களில் பெரிய மாற்றங்கள் ஏற்படாது. குறிப்பாக தற்போது பாதிக்கப்பட்டுள்ள துணி உற்பத்தி, உணவு பதப்படுத்தல் உள்ளிட்டவற்றுக்கு விலக்கு அளிக்கப்படாமல் அதே வரி தொடர்கிறது. அதேபோல் நோட்டு புத்தகங்கள் இல்லாமல், பிரின்டிங் செய்யும் அனைத்து பொருட்களுக்கும் வரி, 12ல் இருந்து, 18 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பிரஸ் தொழில் பாதிக்கும் அபாயம் உள்ளது. 'பலன் மக்களுக்கு கிடைக்கும்'சேலம் பட்டய கணக்காளர் சங்க முன்னாள் தலைவர் ரவீந்திரன்: ஹேர் ஆயில், ஷாம்பு உள்ளிட்ட பல கன்ஸ்யூமர் பொருட்களுக்கு, 18ல் இருந்து, 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலைகள் குறையும். எல்.ஐ.சி., ஹெல்த் இன்சூரன்ஸ் வரி விலக்கு, மருந்து பொருட்களுக்கு வரி குறைப்பால், மருத்துவ சிகிச்சை கட்டணம் குறையும்.அதேபோல் கல்விக்கான பென்சில், ஷார்ப்னர், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கும் வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏராளமான பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளதால், அந்த பலன் மக்களுக்கு கிடைக்கும்.
2 hour(s) ago