வணிகர் சங்க பேரமைப்பு வரும் 11ல் ஆர்ப்பாட்டம்
சேலம்: வணிகர்கள் மீதான வரிச்சுமையை கண்டித்து, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், சேலம் மாவட்டம் சார்பில், வரும், 11ல் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதுகுறித்து, மாவட்ட தலைவர் பெரியசாமி கூறுகையில், ''வணிக கட்டடங்களுக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரியை திரும்ப பெற வேண்டும். சேலம் மாநகராட்சி வணிக நிறுவனங்க-ளுக்கு சொத்து வரியை பல மடங்கு உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும். இப்படி வணிகர்கள் மீதான வரிச்சுமையை உயர்த்தி, வாழ்வாதாரத்தை சுரண்டிக்கொண்டிருக்கும் மத்திய, மாநில அர-சுகள், சேலம் மாநகராட்சியை கண்டித்து, வரும், 11ல் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது,'' என்றார்.