மேட்டூர் அணை உபரிநீர் நிரப்பும் பணி முதல்கட்டமாக 57 ஏரிகளில் தொடக்கம்
மேட்டூர்: மேட்டூர் அணை உபரிநீரை, முதல்கட்டமாக, 57 ஏரிகளில் நிரப்பும் பணியை, திப்பம்பட்டியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கிவைத்தார்.கடந்த ஆண்டு டிச., 31ல், மேட்டூர் அணை, 3ம் முறை நிரம்பி-யது. தொடர்ந்து உபரிநீரை, சேலம் மாவட்டத்தின் வறண்ட ஏரிக-ளுக்கு, திப்பம்பட்டி நீரேற்று நிலையம் மூலம் அனுப்பும் பணி நேற்று தொடங்கியது. அதற்கு உபரிநீர் செல்லும் குழாய்கள் இயந்திரத்தை, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்து அவர் பேசுகையில், ''மேட்டூர் அணை உப-ரிநீர் முதல்கட்டமாக, 57 ஏரிகளில் நிரப்பப்படும். அதற்கு வெள்ளாளபுரம், கன்னந்தேரி ஏரிகளில், துணை நீரேற்று நிலையங்கள் உள்ளன. மீதி, 25 ஏரிகளில் உபரிநீரை நிரப்ப அர-சிடம், 105 கோடி ரூபாய் தேவை என திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பியுள்ளோம். அரசு ஒதுக்கீடு செய்தால், இதர ஏரிகளில் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி உபரிநீர் நிரப்பபடும்,'' என்றார்.தி.மு.க.,வின், சேலம் எம்.பி., செல்வகணபதி பேசுகையில், ''அணை உபரிநீரை, 100 ஏரிகளுக்கு அனுப்பும் திட்டத்தில், 82 ஏரிகளுக்கு மட்டும் அனுப்ப முடியும். தற்போது, 57 ஏரிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. முந்தைய ஆட்சியில் ஒரு ஏரியில் மட்டும் நீரை நிரப்பி, அனைத்து ஏரிகளையும் நிரப்பிய-தாக கூறினர். தற்போதைய முதல்வர் ஸ்டாலின், 2023 ஏப்., 26ல், திட்ட மதிப்பீட்டை, 673.88 கோடி ரூபாயாக உயர்த்தி உத்-தரவிட்டார். அந்த பணி முடிந்து, தற்போது ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது,'' என்றார்.சேலம் கலெக்டர் பிருந்தாதேவி பேசுகையில், ''ஏரிகளில் உபரி நீர் நிரப்பும் திட்டத்துக்கு, 6 ெஹக்டேர் நிலம் கையகப்படுத்தப்-பட்டது. அதன்மூலம், 80 சதவீத பணி முடிந்தது. விரைவில், 82 ஏரிகளிலும் உபரிநீர் தேக்கப்படும்,'' என்றார்.மேட்டூர் சப் - கலெக்டர் பொன்மணி, பா.ம.க.,வின், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் உள்பட பலர் பங்கேற்றனர். பின் அனை-வரும், நங்கவள்ளி, வாத்திப்பட்டி ஏரிக்கு சென்ற மேட்டூர் அணை உபரிநீரை, மலர்துாவி வணங்கினர்.அணை நீர்மட்டம்மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., கடந்த ஆண்டு ஜூலை, 30ல் அணை முதல்மு-றையாகவும், ஆக., 12ல், 2ம் முறையாகவும் அணை நிரம்பியது. நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, கடந்த ஆண்டில், 3ம் முறை அணை நிரம்பியது. நேற்று அணைக்கு வினாடிக்கு, 1,791 கனஅடி நீர் அணைக்கு வந்துகொண்டிருந்தது. 1,000 கனஅடி நீர் பாசனத்துக்கும், 300 கனஅடி நீர் கால்வாயிலும் திறக்கப்பட்டது. நேற்று, 2ம் நாளாக அணை நீர்மட்டம், 120 அடியில் நீடித்தது.